இரவில் தூங்கும்போது செல்போன் பயன்படுத்திருங்களா? இந்த பிரச்சினை ஏற்படும் தெரிஞ்சுக்கோங்க
நமது உடலுக்கு நல்ல தூக்கம் என்பது மிகவும் அவசியமானது. உடலுக்கும், மனதுக்கும், ஓய்வையும், மகிழ்ச்சியைவும் தரக்கூடியது தூக்கம்.
ஒருவர் நன்கு ஆழ்ந்து உறங்கி விழித்துக் கொண்டால் அவர்கள் மிக உற்சாகமாக செயல்படுவதை நாம் காணலாம். எனவே ஒரு மனிதன் 6 இருந்து 8 மணி நேரம் வரை ஆழ்ந்த நித்திரை செய்வது முக்கியமானதாகும்.
நீங்கள் இரவில் படுக்கையறையில் போன் பயன்படுத்தினால் உங்கள் உடலுக்கு ஒரு முக்கியமான சுரப்பி சுரக்காது. இந்த சுரப்பி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மெலேட்டனின்
இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன், லேப்டாப் போன்ற இயந்திரங்கள் அதிகளவில் பாவனையில் உள்ளது.
மனிதர்கள் இரவு முழுவதும் கண்விழித்திருக்கின்றனர். இதற்கான காரணம் இன்றைய இலத்திரநியல் உலகம் தான். இரவில் இருட்டில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது மெலேட்டனின் எனும் ஹார்மோன் நமது உடலில் சுரக்கும்.
இந்த ஹார்மோன் சில நேரங்களில் சுரக்காததன் காரணம், நாம் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் போன்ற பொருட்களிலிருந்து வரும் வெளிச்சம் இந்த ஹார்மோனை சுரக்க விடாது.
ஏனெனில் இந்த ஹார்மோன்கள் இருட்டில் சுரக்க கூடியது. இதனால் தான் இரவில் தூங்கும்போது போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பயன்படுத்தினால் நமது தூக்கத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், இது பக்கவிளைவுகளையும் உண்டாக்கும். நமது மூளை ஒழுங்காக செயற்பட நாம் இரவில் நன்றாக தூங்க வேண்டும்.
இதனால் உடலில் பல நோய்கள் இல்லாமல் நமது வேலைகளை சுறுசுறுப்பாகவும் செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |