வாத்தை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பூனை.. பார்ப்பவர்களை நகைக்க வைத்த காணொளி
வாத்தை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பூனையின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் நாய்கள், பூனைகளை செல்லபிராணியாக வளர்ப்பார்கள். இவை வீட்டில் செய்யும் அட்டகாசங்களை பார்க்கும் பொழுது வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருக்கும்.
இதனை சமூக வலைத்தளங்களில் சில பயனர்கள் காணொளியாக பதிவு செய்து பதிவேற்றுகின்றனர்.
அந்த வகையில் குட்டி பூனையொன்று வாத்தை கட்டியணைத்து தழுவிக் கொள்கிறது. இந்த பூனைக்குட்டியின் செயலை பார்க்கும் பொழுது வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கின்றது.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “தன்னுடைய தாய் என்று நினைத்து தான் பூனை இப்படி செய்கிறதா?” என இணையவாசிகள் காணொளிக்கு கீழ் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
— Posts Of Cats (@PostsOfCats) May 27, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |