வாடிகனுக்கு வரும் கோடிக்கணக்கான வருமானம்- போப் பதவிக்கான சம்பளம் எவ்வளவு?
சமீபத்தில் உலகையே உலுக்கிய ஒரு செய்தியாக போப் பிரான்சிஸ் இறப்பு பார்க்கப்பட்டது.
இதய செயலிழப்புக் காரணமாக தன்னுடைய 88-வது வயதில் போப் பிரான்சிஸ் உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்-ஆக பதவியேற்றுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன்னால் செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பால்கனியில் இருந்து வெளிவந்த அமெரிக்காவில் பிறந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், மாநாட்டின் போது 133 கார்டினல்களால் புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதே போன்று தற்போது கார்டினல் பிரீவோஸ்ட் போப் லியோவாக மாறுவதால், இது அவரது வேலையில் முக்கியமான பதவி உயர்வாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சாதாரண மக்கள் வேலைச் செய்யும் இடத்தில் பதவி உயர்வு ஏற்பட்டால் சம்பள உயர்வு ஏற்படுவது போன்று, போப் அவர்களுக்கும் சம்பள உயர்வு கொடுப்பார்களா? அவரின் சலுகைகள் என்னென்ன என்பதனையும் பதிவில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
போப் சம்பளம் எவ்வளவு?
பாரம்பரியமாக இருக்கும் போப்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான கார் வசதிகள், பயணச் சலுகைகள் மற்றும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
வாடிகன் நகரத்தில் வீட்டுவசதி, உணவு, போக்குவரத்து மற்றும் பிற தேவைகள் உட்பட போப்பின் அனைத்து செலவுகளையும் உதவித்தொகை மற்றும் சலுகைகள் மூலம் சரிச் செய்து கொள்ளலாம்.
போப் லியோ XIV கார்டினலாக இருந்த காலத்தில், அவர் மாதந்தோறும் €4,000 முதல் €5,000 வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.
வாடிகன் நகரத்திற்கான வருமானம் விவரங்கள்
"உலகின் மிகச்சிறிய நாடு" என்று அழைக்கப்படும் வாடிகனின் பொருளாதாரத்தில் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் தாக்கம் செலுத்துகின்றன. பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் வருவாய்கள் வருவதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.
Peter's Pence மூலம் வாடிகனுக்கு மிகப்பெரிய நன்கொடையாளராக அமெரிக்கா உள்ளது. அதிலும் குறிப்பாக இத்தாலி, பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள நன்கொடைகள் அதிகம்.
பீட்டர்ஸ் பென்ஸ் (ஒபோலோ டி சான் பியட்ரோ) என்பது போப்பின் தொண்டு பணிகள் மற்றும் ரோமன் கியூரியாவை ஆதரிப்பதற்காகவும் உலகத்திலுள்ள ஆலயங்களில் இருந்து சேமிக்கப்படும் தொகுப்பாகும். இது ஆண்டுதோறும் சுமார் $27 மில்லியன் வருவாயைக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
போப் லியோ XIV இன் சொத்து மதிப்பு
போப் லியோ XIV-இன் சொத்து மதிப்பு தெளிவாக எங்கும் கூறப்பட்டிருக்கவில்லை. மாறாக கத்தோலிக்கர்களுக்கு உலகின் முன்னணி தேவாலயமான வாடிகனில் உலகம் முழுவதும் பல மதிப்புமிக்க அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த சொத்துக்கள் போப்பின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் தேவையான கவனிப்பைப் பெறும். இறந்த போப் பிரான்சிஸின் நிகர சொத்து மதிப்பு $16 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று அறிக்கைகளில் $32,000 சொத்து மதிப்பு ஆகக் குறைந்தது என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
