கொடிய விஷ பாம்பிடம் இருந்து குழந்தைகளை காப்பற்ற போராடிய பூனை! இறுதியில் குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி
இரண்டு குழந்தைகளை பாதுகாப்பதற்காக விஷ பாம்பை எதிர்த்து போராடி உயிரிழந்த பூனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குயின்ஸ்லாந்தில் ஆர்தர் என்ற பூனை ஒன்று தனது உரிமையாளரின் இரு குழந்தைகளுடன் வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, பழுப்பு நிற விஷ பாம்பு ஒன்று அங்கு வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பூனை சற்றும் யோசிக்காமல் குழந்தைகளை பாதுகாக்க அதனுடன் சண்டை போட்டுள்ளது.

குழந்தைகளை காப்பாற்றும் பணியில், ஆர்தரை அந்த பாம்பு கடித்தது. இதனால் ஆர்தர் மயங்கியுள்ளது. ஆனாலும் சற்று நேரத்திற்கு பின்னர் எழுந்து இயல்பாக இருந்துள்ளது. இதனால் அதன் உரிமையாளர்கள் பாம்பு கடித்தை கவனிக்கவில்லை. மறுநாள் காலையில் ஆர்தர் மீண்டும் மயங்கி விழுந்துள்ளது, இந்த முறை அதனால் எழுந்திருக்க முடியவில்லை.
இதனை கவனித்த அதன் உரிமையாளர் தனாவாவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அந்த பூனையை கொண்டு சென்றுள்ளார்.
ஆனால் பாம்பு கடித்து ஒரு நாள் கடந்து விட்டதால் ஆர்தர் அபாயகட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் மீட்க முடியாத அளவுக்கு விஷம் கடுமையாக பரவியதால் ஆர்தர் உயிரிழந்தது. இதனால் அதன் உரிமையாளர் குடும்பம் மிகுந்து சோகத்திற்கு உள்ளாகினர்.