ஆக்ரோஷமாக படம் எடுத்த நாகப் பாம்புக்கே தண்ணிகாட்டிய பூனை! என்ன தாண்டி எப்படி போறன்னு நானும் பாக்குறேன்
மனிதர்கள் மீது அக்கறை கொண்ட ஒரே செல்லப்பிராணி நாய்கள் தான் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு என்று சொல்லும் வகையில், வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது ஒடிசாவில் வளர்ப்பு பூனை, தன் உரிமையாளர் வீட்டிற்குள் நுழைய முயன்ற ராஜ நாகம் ஒன்றை, நுழையவிடாமல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வீட்டிற்கு காவல்காத்தது.
வீட்டின் முன்பு பாம்பு வந்ததையடுத்து பாம்பு ஹெல்ப்லைன் அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
Odisha | A pet cat stood guard to prevent a cobra from entering a house in Bhubaneswar
— ANI (@ANI) July 21, 2021
Cat has prevented Cobra from entering inside for nearly 30 min till the Snake Helpline reached the spot. Our cat is around 1.5 years old & live with us like a family member: Sampad K Parida pic.twitter.com/dWZXTMf9V5
அந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை அடையும் வரை செல்லப் பூனை பாம்பை வீட்டினுள் நுழையவிடாமல் காவல் காத்து சாதனையை புரிந்திருக்கிறது.
இதனை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்து வெளியிட தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.