ஒய்யாரமாக சேவல் மீது ஏறி சவாரி செய்யும் பூனைக்குட்டி - மில்லியன் பார்வையாளர்களை வியக்க வைத்த காட்சி!
இன்றைய காலக்கட்டத்தில், பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது உண்டு. அதிலும், விலங்குகள் சம்பந்தமான வீடியோக்கள் அதிகமாக பரவி வரும்.
அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோவில் பூனைக்குட்டி ஒன்று ஒரு சேவலின் மீது ஏறி சவாரி செய்கிறது, இதனை பலரும் ரசித்து வருகின்றனர்.
அந்த காட்சியில், முதலில் அந்த பூனை சேவலின் மீது ஏற முயற்சி செய்கிறது. அதன் பின்னர் அலேக்காக சேவலின் மீது ஏறி சவுகரியமாக படுத்து கொள்கிறது.
அந்த சேவல் பூனைக்குட்டியை தன மீது சுமந்தபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து செல்கிறது, பூனைக்குட்டி உற்சாகமாகவும், சொகுசாகவும் சேவலின் மீது சவாரி செய்கிறது.
இந்த வீடியோவை இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.
Last thing you ate is my relationship...🐔🐈 pic.twitter.com/yv3Q4f7XBA
— A Piece of Nature (@apieceofnature) May 20, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.