பூனையால் உடைந்த டிவி! மாட்டிக்கொண்ட நாய்கள்... சிரிப்பை அடக்கமுடியாத காட்சி
பூனை ஒன்று மிகவும் தந்திரமாக டிவி ஒன்றினை உடைத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ள நிலையில், இறுதியில் நாய் பரிதாபமாக மாட்டிக்கொண்ட காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணிகள் இருந்தால் அவைகளின் சேட்டைகள் குழந்தைகளைப் போன்று அதிகமாகவே இருக்கும்.
குழந்தைகள் வீட்டில் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அதே போன்று செல்லப்பிராணிகளும் வீட்டை மகிழ்ச்சியாகவே வைத்திருக்கும்.
இங்கு ஒரு அறையில் இரண்டு நாய்கள் படுக்கையில் அமர்ந்து கொண்டு ரிவி பார்த்துக்கொண்டிருந்த நிலையில், ரிவி அருகே இருந்த பூனை வேண்டுமென்றே டிவியை தட்டிவிட்டு எஸ்கேப் ஆகியது.
இதில் ஒரு நாயும் எஸ்கேப் ஆகியநிலையில், மற்றொரு நாய் மட்டும் தனது எஜமானரிடம் திட்டு வாங்கியுள்ளது.
Cats, agents of chaos...?? pic.twitter.com/qknN07xv3o
— ?o̴g̴ (@Yoda4ever) May 6, 2023