Funny Viral Video: பூனையிடம் சிக்கி கடுப்பாகிய விஷப்பாம்பு... விடாமல் துரத்தி துரத்தி தாக்கிய காணொளி
பூனை ஒன்று செருப்புக்குள் பதுங்கியிருந்த விஷப்பாம்பு ஒன்றினை விடாமல் துரத்தி துரத்தி கடுப்பேற்றிய காணொளி வைரலாகி வருகின்றது.
விஷப்பாம்புடன் மோதல்
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனை எப்பொழுதும் மனிதர்களுடன் ஒரு பிள்ளையாகவே இருக்கின்றது. அவர்களுடன் தூங்குவது, நடப்பது என அனைத்தையும் செய்து கவலையை மறக்கவும் வைக்கின்றது.
அதே போன்று விஷப்பாம்பை பார்த்தால் பூனை என்ன செய்யும்? என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது பூனை ஒன்று பாம்பிடம் வம்பிழுத்த காட்சியே இதுவாகும்.

செருப்பு ஒன்றின் அடியில் பதுங்கியிருந்த விஷம் நிறைந்த விரியன் பாம்பினை அவதானித்த பூனை அதனை விடாமல் தொந்தரவு செய்துள்ளது.
குறித்த பாம்பும் பூனையின் அட்டகாசத்தினை பொறுத்து பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பூனை தனது செயல்பாட்டை நிறுத்தாமல் பாம்பை விடாமல் துரத்தி துரத்தி கடுப்பேற்றியுள்ளது. இந்த சுவாரசியமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |