Viral video: அட என்ன அருமையாக இருக்கே.. புலி மீது ராஜா மாதிரி சவாரிச் செய்த பூனை
பூனையும், புலியும் ஜோடிப்போட்டு மூதாட்டி ஒருவரின் வீட்டிற்கு சென்று உணவுகளை வேட்டையாடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அலப்பறை செய்த பூனை
பூனையின் குறும்புகளுக்கு அளவே இல்லாலம் போய் விட்டது. வீடுகளில் வளரும் பூனைகள் செய்யும் குறும்பத்தனத்தை இணையத்தில் உலா வரும் அநேகமான காணொளிகளில் பார்க்கலாம்.
அந்த வகையில், குறும்புக்கார பூனையொன்று தனியாக அல்லாமல் அதன் நண்பனான பெரிய புலியையும் அழைத்துக்கொண்டு மூதாட்டியொருவரின் வீட்டிற்குள் செல்கின்றது. புலியின் மீது ராஜாவைப் போன்று அமர்ந்து சவாரிச் செய்யும் பூனை, வீட்டிற்குள் சென்றதும் சோபாவில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றது.
அதன் பின்னர் திடீரென படுக்க எடுக்க, சமையலறையில் நண்பனுடன் சென்று ஃபிரிட்ஜின் மேல் அமர்கிறது.
அதன் பின்னர், புலி தன்னுடைய பெரிய கைகளை பயன்படுத்தி ஃபிரிட்ஜின் கதவைத் திறக்கிறது. உள்ளே இருக்கும் உணவை இருவரும் எடுத்து நிம்மதியாக சாப்பிடுகின்றன.
பயத்தில் கதறிய பாட்டி
அப்போது வீட்டின் உரிமையாளரான பாட்டி உள்ளே வந்து பார்க்கிறார். பூனை பார்த்ததும் உள்ளே வந்த மூதாட்டி சோபாவில் அமர்ந்து சாப்பிடும் புலியைக் கண்டதும், பயத்தில் கதறிக்கொண்டு வெளியே ஓடுகிறார். ஆனால், அப்போதும் பூனையும் புலியும் எந்தவித சலனமும் இல்லாமல் சாப்பிடுகின்றன.
இந்த காட்சிகள் அனைத்தையும் சிசிடிவி காட்சிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த காணொளி இணையவாசிகள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது. கற்பனையாக இருந்தாலும், இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
