ஸ்கூட்டர் ஓட்டும் நாய், பூனை ... கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை!
மனிதர்களைப் போலவே விலங்குகளும் நம்ப முடியாத பல்வேறு சாதனைகளை நிகழ்த்துகின்றன.
அந்த வீடியோக்களை பார்க்கும்போது, ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்லும்.
அந்தமாதிரியான வீடியோ ஒன்றை கின்னஸ் சாதனை பக்கம் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், நாயும், பூனையும் இணைந்து பல்வேறு சேட்டைகளை செய்கின்றன.
சுமார் 5 நிமிடம் இருக்கும் அந்த வீடியோவில், பூனையுடன் இணைந்து நாய் பொம்மை ஸ்கூட்டரை நீண்ட தூரத்துக்கு ஓட்டிச் செல்கிறது.
பின்னர், ஸ்கூட்டர் மீது பூனை இருக்கும்போது, நாய் அதனை தள்ளிக்கொண்டு ஓடுகிறது. இது பார்ப்பவர்களுக்கு உண்மையா? என்று கூட தோன்றும். ஏனென்றால், நாயும், பூனையும் சேர்ந்திருப்பது என்பதே வியப்பின் உச்சம்.
அவை இரண்டும் இணைந்து ஒன்றாக ஸ்கூட்டர் ஓட்டுவது, மற்ற ஆக்டிவிட்டிகளை செய்வது என்றால், வியப்புக்கு சொல்லவா வேண்டும்.
you may like this....