இலங்கையின் இயற்கை எழிலை பறைசாற்றும் கசூரினா கடற்கரை... இப்படி மாறிவிட்டதா?
இலங்கையில் வடபகுதியில் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாத்தலமான காரைநகர் கசூரினாகசூரினா கடற்கரை,யளா யாழ்ப்பாணத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் காரைநகா் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
சுற்றுலா பயணிகளையும் தென்னிலங்கை மக்களையும் கவா்ந்து வரும் இந்த கடற்கரை, அளவான அலையுடன் சரிவு குறைவான கடல் மண்ணும் அமைந்திருப்பதால் கடலில் குளிப்பவா்களுக்கு இது இதமான அனுபவத்தை கொடுக்கின்றது.
இந்த கடற்கரை மணற்பரப்பில் அழகிய வடிவங்களில் சிப்பி, சங்கு, கடற்கல் போன்றவை கிடைப்பதால், இங்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் நினைவாக இவற்றை சேகரித்து செல்வது வழக்கம்.
2004 சுனாமியின் போது இந்த கடற்கரை பிரதேசம் முற்றாக நீரால் நிரம்பியது நிலையிலும் யாருக்கும் சேதங்களை ஏற்படுத்தவில்லை.
அதே நாள் இந்த கடற்கரைக்கு மிக அருகில் அமைந்துள்ள ஈழத்துச் சிதம்பரம் எனப்படும் காரைநகா் சிவன்கோவில் தோ் திருவிழாவில் ஏராளமான மக்களும் பங்கேற்றிருந்தனா்.
இந்த கடற்கரைபில் இருந்து பாா்க்கும் போது ஆங்கிலேயரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் எனப்படும் வெளிச்ச வீடு தென்படும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இலங்கையின் இயற்கை எழிலை பறைசாற்றும் கசூரினா கடற்கரையின் வரலாற்று சிறப்பு மற்றும் தற்போதைய நிலை தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |