Beauty Tips: ஒரே இரவில் முகப்பரு மறைய வேண்டுமா? இந்த இரண்டு பொருள் மட்டும் போதும்
முகத்தின் அழகை பராமரிக்க பல வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி வரும் நாம், முகம்பருவை நீக்கவும் வீட்டு வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேங்காய் பல வைட்டமின்களைக் கொண்டுள்ளதுடன், உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கின்றது. தேங்காய் எண்ணெய்யுடன் ஆமணக்கு எண்ணெய் கலந்து முகத்தில் தடவினால் நல்ல மாற்றத்தை காணலாம்.
தேங்காய் எண்ணெய்யுடன் ஆமணக்கு எண்ணெய்
முகத்தின் சுருக்கங்கள் அல்லது வயதான தோற்றத்தின் அறிகுறிகள் தென்பட்டால் இந்த இரண்டு எண்ணெய்களை கலந்து பயன்படுத்தலாம். ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்ட இவை சருமத்தில் உள்ள வயதான செயல்முறைகள், சுருக்கங்களை குறைக்கும்.
இந்த எண்ணெய்யை கலந்து தூங்கும் முன்பு முகத்தில் தடவி வந்தால், சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், வறட்சி இல்லாமலும் இருக்கும்.
இதே போன்று இரவில் முகத்தில் தடவினால் முகப்பரு பிரச்சினை நீங்கும். ஏனெனில் இவற்றில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகப்பரு வராமலும், முகப்பருவை அகற்றவும் செய்கின்றது.
கோடை வெயிலால் முகம் பொலிவடைந்து காணப்படுவதை தடுக்கின்றது. மேலும் தோல் அலற்சி மற்றும் வீக்கத்தையும் குறைக்கி்ன்றது.
முகத்தில் தடவுவது எப்படி?
இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் சில துளிகள் ஆமணக்கு எண்ணெய் சேர்க்கவும். ஆமணக்கு எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய்யை கூட சேர்த்துக் கொள்ளலாம்.
இதை உங்கள் முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு, காலையில் முகத்தை கழுவவும், நீங்கள் விரும்பினால், அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தையும் கழுவலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |