Debit Card இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எவ்வாறு பெற்றுக் கொள்வது?
கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் கையில் இல்லாத போது எவ்வாறு ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் பணம் பெற்றுக் கொள்வது என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கலாம், இந்திய ரிசர்வ் வங்கி இதற்கு வழிமுறை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அனைத்து வங்கிகளுக்கும் அனைத்து ஏடிஎம் வளையமைப்புகளுக்கும் இது தொடர்பான தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
வங்கிகள் அட்டை இன்றி கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இவ்வாறு பணம் மீள பெற்றுக் கொள்வதற்கு ஓர் வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதி அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டது, கடன் அட்டையோ டெபிட் அட்டையோ இன்றி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
Unified Payments Interface இன்னும் முறைமையை அனைத்து வங்கிகளுக்கும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி தேசிய கொடுப்பனவு கூட்டுறவு அமைப்பு அமைப்பிற்கு அறிவுறுத்தியுள்ளது.
Unified Payments Interface ஊடாக வாடிக்கையாளர் அனுமதி வழங்கப்படுவதுடன். National Financial Switch (NFS) அல்லது ஏ.டி.எம் வலையமைப்பு ஊடாக பணம் செலுத்தப்படுகின்றது.
மத்திய வங்கியினால் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை விடவும் மேலதிக கட்டணங்கள் அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு பணம் பெற்றுக் கொள்வது முதலில் இந்த வசதியை வழங்குமாறு வாடிக்கையாளரிடம் கோர வேண்டும்.
உதாரணமாக ICICI வங்கியில் இந்த சேவையை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
ICICI வங்கியின் செயலியைத் தெரிக அட்டையின்றிய பண மீளப்பெறல் (Click on the Cardless cash withdrawal option) ஆப்ஷனை தெரிக
திரையில் வரும் தகவல்களை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
Submit ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
நீங்கள் வெற்றிகரமாக இந்த சேவையை பதிவு செய்து கொண்டால் 6 Digit Code ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
இந்த இலக்கத்தை ஆறு மணித்தியாலங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
அருகாமையில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரத்திற்கு சென்று Mobile Number உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்யவும்.
தற்காலிகமாக செயற்படுத்திய 4 இலக்க கோட், ஆறு இலக்க கோட் உள்ளிட்டனவற்றை உள்ளீடு செய்யவும்.
பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளவும், நீங்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் சரியாக இருந்தால் பணத்தை ஏ.டி.எம் இலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.