Flipkartல் அடிக்கடி பொருட்கள் வாங்குவீர்களா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஒன்லைன் ஷொப்பிங் இணையதளங்கள் ஒன்லைனிலேயே பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக நடவடிக்கையொன்றை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஓன்லைன் ஷொப்பிங்
ஷொப்பிங் என்றாலே ஓன்லைன் தான் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆடைகளுக்கு மட்டுமே என்றிருந்தது தாண்டி சமையலறை பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான Furnitures வரை எதற்கெடுத்தாலும் ஓன்லைன் தான்.
இளசுகள் மட்டுமே ஷொப்பிங் செய்திருந்த நேரத்தில், பாட்டி, தாத்தா, குழந்தைகள் வரை அனைவருமே ஓன்லைனில் தேர்ந்தெடுத்து பொருட்கள் வாங்கத் தொடங்கிவிட்டனர்.
Cash On Delivery
இந்நிலையில் Flipkart புதிய Fee ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, cash on deliveryயை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் handling feeயை செலுத்த வேண்டும், இந்திய ரூபாய் மதிப்பின்படி 5 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே ரூ.500க்கும் குறைவாக பொருட்களை வாங்கும் நபர்களுக்கு ரூ.40 வரை delivery fee வசூலிக்கப்படுகிறது, ரூ.500க்கும் அதிகமாக விலை இருந்தால் delivery fee செலுத்த தேவையில்லை.
அதுவே நீங்கள் Flipkart Plusல் சேர்ந்து கொண்டாலும் delivery fee கேட்கப்படமாட்டாது.
ஏன் இந்த மாற்றம்?
இந்நிலையில் cash on delivery வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வண்ணம் புதிதாக handling fee வசூலிக்க Flipkart முடிவு செய்துள்ளது.
cash on deliveryயை தேர்வு செய்யும் அனைவருமே இதை கொடுக்க வேண்டும், இதுவே ஓன்லைனில் பணம் செலுத்துவதாக இருந்தால் செலுத்தத் தேவையில்லை.
Flipkartல் பொருட்களை வாங்கிவிட்டு cash on delivery யை தேர்வு செய்தாலே உங்களுக்கு ”COD ஆப்ஷனை தேர்வு செய்திருப்பதால் கூடுதலாக 5 ரூபாய் கொடுக்க வேண்டும், ஓன்லைனில் பணம் செலுத்தினால் நீங்கள் இதை தவிர்க்கலாம்” என மெசேஜ் காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.