முழங்கால் வலியை விரட்டியடிக்கும் கேரட்: எப்படி சாப்பிடுவது நல்லது?
முழங்கால்கள் வலிக்கத் தொடங்கும் வரை நாம் எந்தளவுக்கு நம் முழங்கால்களை நம்பியிருக்கிறோம் என்பதை நம்மில் பலரும் உணர்வதில்லை.
நிர்வகிப்பதற்கு மிகவும் கடினமான வலிகளில் ஒன்று தான் நாள்பட்ட முழங்கால் வலியாகும், ஏனெனில் நீங்கள் நின்று கொண்டிருந்தாலும் அல்லது உட்கார்ந்திருந்தாலும், உங்கள் முழங்கால்கள் ஈடுபட்டிருக்கும் என்பதை எல்லோரும் கவனித்திருப்போம்.
நீங்கள் நடந்து சென்றாலும், படிக்கட்டுகளில் ஏறினாலும், பைக்கிங்கில் சென்றாலும் உங்கள் முழங்கால்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கும்.
அதனால்தான் உங்கள் முழங்கால்களில் ஏற்படும் வலியும் உங்கள் முழு நாளையும் முழுமையாக பாதிக்கும்.
பழைமை வாய்ந்த சீன தீர்வு
இந்த நாள்பட்ட முழங்கால் வலி, கீல்வாதம் அல்லது சில சந்தர்ப்பங்களில் சில காயங்களால் ஏற்படலாம், ஆனால் அதிர்ஷ்டவசமாக வலியிலிருந்து குணமடைய உதவும் பல்வேறு வைத்தியங்கள் உள்ளன.
முழங்கால் வலியைக் குறைக்கும் அல்லது குணப்படுத்தும் போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கேரட் பற்றிதாங்க இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
நீங்கள் சிறந்த கண்பார்வையைப் பெற விரும்பினால் கேரட் சாப்பிட வேண்டும் என பலராலும் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், இதை விட இன்னும் நிறைய பயன் இருக்கிறது.
காரட்டில் வைட்டமின்-ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதால் முழங்கால் வலியை சரிசெய்கிறது, இவை இரண்டும் வலுவான அழற்சி எதிர்ப்பு சேர்மங்களாகும்.
கேரட்டை தினமும் இரண்டு முறை பச்சையாக சாப்பிட்டு வந்தால் முழங்கால் வலி கணிசமாக குறைவதை நீங்களே உணர்வீர்கள்.