கேரட்டை இப்படி உண்பதால் முழுச்சத்தும் கிடைக்குமா?
மரக்கறிகளில் கேரட் என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிகமானோர் கேரட்டை பச்சையாகவே உண்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஆனால் இதை பச்சையாக உண்ணும் போது அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுவதுமாக கிடைப்பதில்லை. கேரட்டில் அதிக நார்ச்சத்துக்களும் மற்றும் வைட்டமின் ஏ சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இது ஜீரண ஆரோக்கியத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஹார்மோனை சமநிலைப்படுத்தி வைத்திருக்கிறது.
இவ்வாறு நிறைவான குணநலங்களை வைத்திருக்கும் கேரட்டை நாம் பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை கிடைக்கிறதா? எனபது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரட்
கேரட்டை நாம் பச்சையாக அல்லது சமைத்து மற்றும் ஜூஸாகவோ உண்ணலாம். ஆனால் இந்த கேரட்டை ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது தான் அதன் சத்துக்குகள் எமக்கு முழுமையாக கிடைக்கிறது.
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
1. உங்களுக்கு கேரட்டை ஜூஸாக குடித்தால் அதில் கொஞ்சம் ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களுக்கு ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலம் கிடைக்கும்.
2. கேரட்டில் சத்துக்களை அப்படியே வேண்டும், இல்லை அதை விட அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் இதை பொரியலாகவோ அல்லது சாம்பாராகவோ சமைத்து உண்ணலாம்.
நல்ல கொழுப்பு அமிலங்களுடன் சேர்த்து சாப்பிடும்போது கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ உடல் உறிஞ்சும்.
3.கேரட்டை பச்கையாக கடித்து உண்பவர்கள் நீங்கள் எவ்வளவு சாப்பிட்டலும் உங்களால் அதில் உள்ள முழு சத்துக்களையும் பெற்று கொள்ள முடியாது.
நீங்கள் அவ்வறு தான் சாப்பிடுவீர்கள் என்றால் அதனுடன் நீங்கள் யோகர்ட் தயிரில் சீரகப் பொடி, உப்பு போன்றவற்றைச் சேர்த்து அதில் தொட்டு சாப்பிடலாம்.
இவ்வறு சாப்பிட்டால் இதிலுள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் கேரட்டில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ள உதவி செய்யும்.