கமகம வாசனையுடன் மணக்க மணக்க சாப்பிடலாம் சூப்பரான கேரட் பாயசம்! இலங்கை ஸ்டைலில்..
பொதுவாக பண்டிகை நாட்களில் வீடுகளில் பாயசம் செய்து வழக்கம். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று.
இதில் உலர்ந்த திராட்சை, கஜி மற்றும் சேமியா போன்ற பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
அந்த வகையில் நாவில் இனிப்பு சுவையை நாட்டியமாட வைக்கும் கேரட் பாயசம் செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கேரட் - 250 கிராம்
வெல்லம் - கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் பால் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - இரண்டு டீஸ்பூன்
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
பாயசம் தயாரிப்புமுறை
முதலில் சிறிய துண்டுகளாக கேரட்டை வெட்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதனை மிக்ஸி சாரில் போட்டு மை போன்று அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.
பாயசத்திற்கு முக்கியமான வெல்லத்தை நன்றாக நீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து கேரட் விழுது, தேங்காய் பால் மறறும் ஏலக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் மெல்லிய தணலில் வைக்கவும்.
இறுதியில் வறுத்த முந்திரி, திராட்சை என்வற்றை சேர்த்து கிளறி இறக்கி பவுல் அல்லது டம்ளரில் ஊற்றினால் சூப்பரான கேரட் பாயசம் தயார்!