மாரடைப்பு வருவதற்கு முன்பு ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன?
இன்று உலக அளவில் இதய நோய் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவு முறை, உடலுக்கு போதிய உழைப்பு கொடுக்காமல் இருப்பது, குடி மற்றும் போதை பழக்கம் இவற்றினை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளம் வயதினர் தொடங்கி திரை பிரபலங்கள் என அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களில் உயிரிழக்கும் நிலை ஏற்படுகின்றது. தற்போது Cardiac arrest வருவதற்கு முன்பு ஏற்படும் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மாரடைப்பு Cardiac Arrest அறிகுறிகள்
அதிக உழைப்பு மற்றும் மனக்குழப்பத்தினால் பொதுவாக சோர்வு ஏற்படும். ஆனால் மாரடைப்பு ஏற்படும் முன்பு காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுமாம். இவ்வாறு வரும் போது குளிப்பது அல்லது தூங்குவது போன்ற செயலில் ஈடுபடலாம் என்றும் இதனால் மாரடைப்பையும் தவிர்க்கலாம் என்று கூறப்படுகின்றது.
உயிரை காப்பாற்ற நெஞ்சு வலியுடன் கார் ஓட்டிச்சென்ற மாரிமுத்து! டப்பிங் ரூமில் என்ன நடந்தது? வெளியான உண்மை
வயிற்றில் திடீர் வீக்கம் வலி ஏற்படுவதுடன், குமட்டல் ஏற்படும். தொடர்ந்து சில மணி நேரங்களாக இவ்வாறு காணப்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகவும். இவையும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆகும்.
திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டால் இவை மாரடைப்பிற்கான அறிகுறிகளில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த அறிகுறிகள் மாரைடப்பு ஏற்படுவதற்கு 6 மாதத்திற்கு முன்பே, தலைசுற்றலுடன் தோன்றுமாம்.
இரவில் தூங்குவதற்கு சிரமப்படுவதுடன், இடைஇடையே திடீரென கண்விழிப்பது, தூங்கமுடியாமல் சிரமப்படுவது, விடியும் முன்பு எழுந்துவிடுவது இந்த அறிகுறிகள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகவும்.
மனசோர்வு, பதட்டம் இவற்றுடன் அதிகமாக வியர்ப்பது மாடைப்புக்கான அறிகுறியில் முக்கியமாகும்.
இதய துடிப்பில் மாற்றம் ஏற்பட்டு, மயக்கம் சோர்வு இவற்றினை உணர்ந்தால் உடனே மருத்துவர்களை அணுகவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |