அடிக்கடி ஏலக்காய் டீ குடிச்சா என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கலாமா?
ஏலக்காய் நறுமணமிக்க பொருள் மட்டும் அல்ல.
இதை தேநீராக்கி குடித்துவந்தால் அளவற்ற நன்மைகளும் உண்டாகும்.
அப்படி ஏலக்காய் தேநீரில் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஏலக்காயில் உள்ள சத்துக்கள்
ஏலக்காய் டீயில் பினாலிக் அமிலங்கள், ஸ்டெரால்கள் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன.
ஏலக்காயில் பினீன், சபினீன், லிமோனென், சினியோல், லினலூல், டெர்பி னோலீன், மைர்சீன் என்ற பொருட்கள் காணப்படுகிறது.
மேலும் ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு, ஆண்டிப்ரோலிஃபெரேடிவ், ஆண்டிடியாபெடிக், ஆண்டி மைக்ரோபியல், ஆண்டிஹைபர்டென்சிவ் மற்றும் டையூரிடிக் விளைவுகள் காணப்படுகின்றன.
ஏலக்காய் டீ போடுவது எப்படி?
ஏலக்காயை நொறுக்கி இந்த டீ யானது தயாரிக்கப்படுகிறது.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டீஸ்பூன் அளவு ஏலக்காய் பொடியை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து தேநீர் தயாரிக்கப்படுகிறது.
ஏலக்காய் டீயின் நன்மைகள்
- உணவுக்கு பிறகு ஏலக்காய் தேநீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
- ஏலக்காய் டீ குடிப்பதால் சீரண சக்தியை மேம்படுத்த முடியும்.
- இரைப்பை அமில சுரப்பை தூண்டுவதன் மூலம் அஜீரணம் மற்றும் வாய்வுத் தொல்லை ஏற்படுவதை தடுக்கிறது.
- குமட்டல், மலச்சிக்கல், கடுமையான வயிற்றுப் பிடிப்புக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.
- ஏலக்காய் டீயில் பினீன், லினாலூல், லிமோனீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் செல் அழிவதை தடுக்க உதவுகிறது.
- இந்த தேநீரில் உள்ள ப்ளவனாய்டுகள் இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதனால் இரத்த ஒட்டம் சீராகி இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
- ஏலக்காய் தேநீரில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி பண்புகள் காணப்படுகிறது.
- ஏலக்காய் விதையின் சாற்றை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி வந்தால் பொடுகுத் தொல்லையை நீக்கி புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்.
- உச்சந்தலை மற்றும் மயிர்க்கால்களில் ஏற்படும் பூஞ்சை மற்றும் சரும தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது.
- ஏலக்காய் தேநீர் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
- ஏலக்காய் தேநீரில் மைர்சீன், சபினீன், கேரீன், லிமோனீன், யூடெஸ்மீன், செட்ரீன் மற்றும் டெர்பினோலீன் போன்ற அத்தியாவசிய டெர்பீன்கள் உள்ளன.
- ஏலக்காய் சருமத்தில் உள்ள பருக்கள், முகப்பரு, தடிப்புத் தோல் அழற்சி, தோல் பிரச்சினைகள் போன்றவற்றை களைய உதவுகிறது. இது ஃபிளாவனாய்டு மற்றும் குளுதாதயோன் அளவை அதிகரிக்கிறது.
- இது சரும செல்கள் ஆக்ஸினேற்ற அழுத்தத்தால் அழிவதை தடுக்கிறது.
- இது சொறி, காயங்கள், கடி, தழும்புகள் மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது.
- ஏலக்காய் தேநீரில் ஃபீனாலிக் அமிலங்கள், டெர்பெனாய்டுகள், பைட்டோஸ்டீராய்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது.
- கீல்வாதம், டைப் 2 நீரிழிவு நோய், ஆஸ்துமா, அதிக உணர்திறன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, தசைப்பிடிப்பு, டிமென்ஷியா, அல்சைமர், வயிற்றுப் புண்கள், தோலழற்சி போன்ற நோய்களை குணப்படுத்த இதிலுள்ள பைட்டோ கெமிக்கல்கள் உதவுகிறது.