குழந்தைகள் விரும்பி உண்ணும் குடமிளகாய் ஆம்லேட்... எப்படி செய்வது?
அசைவ பிரியர்களின் உணவுப் பட்டியலில் மிகவும் முக்கியமாக முதல் இடத்தினை பிடிப்பது என்னவெனில் முட்டை தான். ஆம் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக இதனை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நன்கு ஆரொக்கியமாக இருப்பார்கள்.
அந்த வகையில் குழந்தைகளுக்கு முட்டையை ஸ்நாக்ஸ் போன்று கொடுக்கலாம். குடைமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ள நிலையில், குடமிளகாய் ஆம்லேட் எவ்வாறு செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- குடைமிளகாய் - ஒன்று
- முட்டை - 2
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)
- ப.மிளகாய் - 1
- கேரட் துருவியது - 2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
நீங்கள் எடுத்திருக்கும் குடமிளகாயை வட்ட வட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கிவிடவும்.
பின்பு வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் இவற்றினையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பௌல் ஒன்றில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
இதனுடன் வெட்டி வைத்திருக்கு தக்காளி, கேரட், பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் மிளகு தூள், உப்பு இவற்றினை நன்கு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் குடமிளகாய் ரிங்ஸை இரண்டு பக்கம் திருப்பி நன்கு திருப்பிபோட்டு சிறிது சூடேரியதும், அதனுள் முடடையை ஊற்றவும்.
பின்பு எப்பொழுதும் போல் முட்டையை திருப்பி போட்டுக் கொள்ளவும். தற்போது சுவையான குடமிளகாய் ஆம்லேட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |