அட்சய திருதியையில் தங்கம் வாங்க முடியலையா? இந்த பொருளை வாங்கினாலும் செல்வம் பெருகும்!
அட்சய திருதியை எனப்படுவது இந்துக்களின் புனித நாளாக கருதப்படுகின்றது. அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
அட்சய திருதியை என்பதன் உண்மையான அர்த்தம் வளர்க என்பதாகும். அதனால் தான் அட்சய திருதியை நாளில் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அது மேம்மேலும் உயர்வு கொடுக்கும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் அந்த ஆண்டு ழுழுவதும் சிறந்த பெருக்கத்தை கொடுக்கும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
பொதுவாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க பலர் ஆர்வம் காட்டுவார்கள். ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கிவிடுவார்கள். இந்நிலையில் நாளை கொண்டாடப்படவுள்ள அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்க முடியாதவர்கள் அதற்கு மாற்றீடாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கத்துக்கு நிகராக என்ன வாங்கலாம்?
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதில் பல நன்மைகள் இருந்தாலும் அதன் விலை காரணமாக பெரும்பாலானவர்களுக்கு தங்கம் வாங்க முடியாத நிலை காணப்படும். அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் குறைந்த விலையில் கிடைக்கும் உப்பை வாங்குவதும் தங்கத்துக்கு நிகராக செல்வ செலிப்பை கொடுக்கும்.
அட்சய திருதியை நாளில் சிலர் வெள்ளி, புத்தாடைகள் அல்லது வாகனம் போன்றவற்றையும வாங்குவற்கு ஆசைப்படுவார்கள். ஆனால் இவற்றை வாங்குவதால் கிடைக்கும் மங்களகரமான பலன்கள் வெறும் உப்பை வாங்குவதால் முழுமையாக கிடைத்துவிடும். இந்து மத சாஸ்திரங்களின் பிரகாரம் உப்புக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது.
செல்வ செழிப்பை வழங்கும் லட்சுமி தேவியின் மறுஉறுவமாக உப்பு பார்க்கப்படுகின்றது. இதனால் அட்சய திருதியை நாளில் உப்பு வாழ்குவதால், லட்சுமியின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
அதனால் வீட்டிற்கு சமநிலை, ஆசீர்வாதம் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதாகக் கருதப்படுகிறது. உப்பு அனைவராலும் எளிதாக வாங்க கூடிய ஒரு மங்களகரமாக பொருள் என்பதால் அட்சய திருதியையில் உப்பு வாங்குவது தங்கம் வாங்குவதற்கு நிகரான செல்வ செழிப்பை கொடுக்கும்.
அட்சய திருதியை அன்று உப்பு வாங்குவதால் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பன சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
