உயிரை கொல்லும் மார்பக புற்றுநோய்... தப்பிக்க வேண்டுமா? அப்போ இதை படியுங்கள்
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நோய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண்களின் உயிரை குடித்து வருகிறது. உலகளவில் இந்நோயால் இறந்தோர் சதவீதம் 18.1 ஆக பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த மாநில அரசு பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நமது உடலில் பல உயிரணுக்கள் உள்ளன. இந்த உயிரணுக்கள் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து, பல உயிரணுக்களை உருவாக்கும்.
இதன் பணி சீராக இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருப்போம். இதில் ஏதேனும் பிறழ்வுகள் ஏற்பட்டால், பழைய உயிரிரணுக்கள் கால அளவை மீறி வாழ்ந்து விடும்.
இந்த உயிரணுக்கள் நன்றாக வேலை செய்யும் உயிரணுக்களை அழித்துவிடும். இதனால், அவற்றின் வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும். இதனால்தான் பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி உருவாகிறது. அதுவே நாளடைவில் புற்றுநோய் கட்டியாக மாறிவிடுகிறது.
மார்பக புற்றுநோய் பொதுவாக மார்பகத்தில் பால் சுரக்கும் இடத்தில் வரும். இந்த கட்டிகள் வலியே இல்லாமல் வளரும். சிறிது, சிறிதாக வளர்ந்து கோலிக்குண்டு அளவிற்கு வளர்ந்து விடும்.
இந்நோயிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகள் :
1. தினமும் பெண்கள் தங்கள் மார்பகங்களை பரிசோதனை செய்ய வேண்டும். இப்படி மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்வது நல்லது.
2. குளிக்கும்போது மார்பகங்களை தொட்டுப்பாருங்கள். நீரோடு தொட்டுப் பார்க்கும்போது கட்டி இருந்தால் தெரிந்துவிடும்.
3. கட்டி மாதிரி தெரிந்தாலோ, நரம்பு சுருண்டு இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ உஷராகிவிடுங்கள்.
4. வலி இல்லாத கட்டி 2 வகைப்படும். ஒன்று மார்பக புற்றுநோய் கட்டி. இன்னொன்று மார்பக நார்த்திசுக் கட்டி (இவை சாதாரண கட்டி).
5. மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டி என்று தெரிந்தால், உடனே மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். இல்லையென்றால், கதிரியக்க சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கும். கீமோ தெரபி கொடுக்க வேண்டும். அதனால் அலட்சியம்வேண்டாம்.
ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டால் இந்நோயிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளது. இல்லையென்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். சிந்தித்து செயல்படுங்கள்...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |