42 வருடத்துக்கு முன் காணாமல் போன பெண்.. கடைசியில் மொத்த குடும்பத்துக்கும் காத்திருந்த சோகம்!
42 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கனடாவை சேர்ந்த பெண் கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் ஒன்றாரியோவிலுள்ள வேனியர் என்னும் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் Dale Nancy Wyman. இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திடீரென காணாமல் போயுள்ளார்.
அப்போது 22 வயதான நான்சி வீட்டில் இருந்து சூட்கேஸுடன் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர், குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசாரும் காணாமல் போன நான்சியை தேடி வந்துள்ளனர்.
அப்போது கடைசியாக நான்சி சென்ற டாக்ஸி டிரைவர் குறித்து போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த டாக்ஸியின் ஓட்டுநரை கண்டுபிடித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டிரைவர் நான்சி எங்கே சென்றார் என்பது தனக்கு தெரியாது என்றும், அவரை நான் பஸ் ஸ்டாண்ட்டில் இறக்கி விட்ட போது, இரண்டு பேருடன் அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

காணவில்லை
இதனிடையே, நான்சி காணாமல் போய் 40 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டு ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர், நான்சியின் தற்போதைய வயதை ஏற்றபடி, ஓவியம் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.
இதுவரை அவரது குடும்பத்தினர்கள் நான்சியை தேடுவதை நிறுத்தவில்லை என்றும், நான்சியை அதிகம் மிஸ் செய்வதாகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டனர்.
இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், சகோதரி நான்சி பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும் என்றும் அவரின் குடும்பத்தினர் காத்திருந்துள்ளனர்.

42 ஆண்டுக்கு பின் கிடைத்த மகள்
இந்த நிலையில், சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகு நான்சி குறித்த செய்தி ஒன்று அவரது குடும்பத்தினரை தேடி வந்துள்ளது.
அதாவது, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, நான்சி வேறொரு நாட்டில் வாழ்ந்து வந்ததாகவும், மூன்றாவது நபர் ஒருவர் தெரிவித்துள்ளதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளது.
சோகம்
மேலும், இந்த தகவலையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு நான்சி வேறு நாட்டில் இருந்தது பற்றிய தகவல் தெரிய வந்தாலும் நான்சி சமீபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும் அந்த மூன்றாவது நபர் தெரிவித்துள்ளார்.
இதனால் நான்சி பற்றி தகவல் கிடைத்து அவரின் இறப்பு செய்தியை கேட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது.