மிட்டாய் சுவைக்க கோடிகளில் சம்பளம்! கனடாவில் ஓர் வினோத வேலை
கனடாவில் நிறுவனம் ஒன்று வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பால் மக்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கிபோயுள்ளனர்.
ஆம், சுவையான மிட்டாய்களை சுவைப்பதற்காக தலைமை மிட்டாய் அதிகாரிகளை தேடி வருகிறார்களாம், இதற்காக அவர்கள் வழங்கும் சம்பளமோ இலங்கை மதிப்பில் கோடிகளை தொடுகிறது.
Candy Fun House என்ற கனேடிய நிறுவனத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

(© yanadjan - stock.adobe.com)
தலைமை மிட்டாய் அதிகாரியின் வேலையே சாக்லேட் பார்கள் முதல் மிட்டாய்கள் வரை பலவிதமான மிட்டாய்களை சுவைத்து சொல்ல வேண்டும், இதற்கு முதல் தகுதியே 5 வயதை பூர்த்தி செய்திருந்தால் போதும்.
இதற்காக நிறுவனம் அவருக்கு 78,000 டாலர்கள் முதல் 100,000 டாலர்கள் வரை சம்பளமாக வழங்குகிறது.
ஜூலை மாதம் வெளியான இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2022.