உலகத் தமிழர்கள் மத்தியில் பிரபலமான கனடா பிரதமர் மீது கல் வீசி தாக்குதல்
கனடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது, கடந்த வாரம் கூட ஒன்டோரியா மாகாணத்தில் பிரசாரம் திட்டமிட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் கூடி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தனது வேனில் ஏறிய போது அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கற்களையும், குப்பைகளையும் அவர் மீது வீசினர்.
அதில் சில கற்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் தோள்பட்டையில் விழுந்தன. இதைத் தொடர்ந்து, அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இதில் பிரதமருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்ற போதும், போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.