போர் அடிக்குதுனு மீன் பிடிக்க போன கனடா ஜோடிக்கு அடித்த ஜாக்பாட்! லக் அடிச்சா இப்படி அடிக்கணும்!
கனடாவில் பொழுதுபோகாமல் மீன் பிடிக்க சென்ற இளைஞருக்கு அதிர்ஷ்டம் கடல் தேடி வந்திருக்கின்றது.
தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியை சேர்ந்தவர் பிரேடன் ரூஸ். இவர் கடந்த வாரம் தனது விடுமுறையின் போது பொழுதுபோகாமல் இருந்துள்ளார்.
பாடகிகளையும் பொறாமை பட வைத்த இந்திய சிறுமி....மொழியை கடந்து மில்லியன் இதயங்களை உருக வைத்த திறமை
அப்போது மீன் பிடிக்க செல்லலாம் என முடிவெடுத்து தனது தோழி சிட்னி கோசெலென்கோ உடன் காரில் ஏறி 3 மணி நேரம் பயணித்துள்ளார்.
படகில் சிறிதுநேரம் செலவிட்ட பிறகு அவர்களின் தூண்டிலில் ஏதோ சிக்கியதை உணர்ந்திருக்கிறார். உடனடியாக அதனை வெளியே எடுக்க அவர் முயற்சி செய்தாலும் அவரால் முடியவில்லை. பிறகு பார்த்தால் தூண்டிலில் சிக்கியது மிகப்பெரிய மீன்.
ரிச் ஓட்டல் சுவையில் மொறு மொறு தோசை சுடுவது எப்படி?
அவர்களது தூண்டிலில் 'ஸ்டர்ஜன்' எனப்படும் மிகப்பெரிய மீன் சிக்கியிருந்ததை அவர்கள் அறிந்ததும் சந்தோஷத்தில் இருவரும் துள்ளி குதித்திருக்கின்றனர்.
'வாழும் டைனோசர்' மீன் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த மீன் 8 அடி 6 அங்குலம் நீளமும் 159 கிலோ எடையும் இருந்திருக்கிறது. இதனை வீடியோ எடுத்து அவர்களே வெளியிட்டுள்ளனர்.