கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லையா? கனடா பிரதமர் வெளியிட்ட அதிரடி உத்தரவு
கனடாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று புதிய உத்தரவினை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) பிறப்பித்துள்ளார்.
கனடாவில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அங்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், விமானம், ரயில், கப்பலில் பயணம் செய்பவர்கள் நிச்சயம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும் அனைவரும் தடுப்பூசி விரைவில் செலுத்திக்கொள்ள வலியுறுத்தப்படும் நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் Justin கூறுகையில், கனடாவில் தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் சம்பளமில்லாத விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
மக்கள் பயணிக்கும் இடங்களான விமானம், ரயில், கப்பல் இங்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும். அக்டோபர் 29ம் தேதிக்குள் ஊழியர்கள் முழுமையான தடுப்பூசியை செலுத்தி கொண்ட நிலையை ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும்.
நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக, சுதந்திரத்தை பெற தகுதியானவர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.