கனடா பிரதமரின் மனைவியை ஆபாசமாக பேசிய நபர்! கொந்தளித்த ஐஸ்டின் ட்ரூடோ; பரபரப்பு சம்பவம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்த்து, அதிகமாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், அதனையெல்லாம் அமைதியாக எதிர்கொண்ட பிரதமரை ஆத்திரமடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கனடாவில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த ஜஸ்டின் ட்ரூடோ, தான் கொரோனாவைக் கையாண்ட விதம் மக்களுக்கு தன் மீது நல்லெண்ணத்தையே உருவாக்கி இருக்கிறது.
இதனால், பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, தடுப்பூசியை எதிர்க்கும் கூட்டத்தினர் அவருக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர்.
இதன் எதிர்மறையாக தேர்தல் பிரச்சாரங்களில் கலாட்டா செய்வதும், பிரச்சாரங்களை நடத்த விடாமல் தடுப்பதுமாக பெரும் இடைஞ்சலை உருவாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில்,. பிரிட்டிஷ் கொலம்பியாவில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்த பிரதமரை பார்த்து, திடீரென்று ஒரு நபர் மோசமான வார்த்தைகளால் திட்ட தொடங்கினார். இருந்தும் பிரதமர் அமைதியாக இருந்துள்ளார்.
அதன்பின்பு, அந்த நபர் பிரதமரின் மனைவி குறித்து ஆபாசமாக பேசியிருக்கிறார். உடனே இதனை பொறுத்துகொள்ள முடியாத பிரதமர், அந்த நபரை பார்த்து அந்த நபரைப் பார்த்து, நீ சென்று தொல்லை கொடுக்க மருத்துவமனை எதுவும் இல்லையா என கத்திவிட்டார்.
அதாவது, போராட்டக்காரர்கள் மருத்துவமனை முன்பு நின்று தான் போராடுகிறார்கள். அந்த அர்த்தத்தில் தான் பிரதமர் கூறியிருக்கிறார். அதன் பின்னர், பின்னர் இதுகுறித்து பேசிய ட்ரூடோ, என்னை என்ன சொன்னாலும் பரவாயில்லை, ஆனால், என குடும்பத்தை விமர்சிப்பதை என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றார்.
மேலும், பொதுவாக, ட்ரூடோவின் மனைவியும் அவருடன் பிரச்சாரம், பேட்டி போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதுண்டு. ஆனால், நல்ல வேளையாக இந்த சம்பவத்தின்போது அவர் ட்ரூடோவுடன் இல்லை....