இறந்தவர்களின் புகைப்படத்தை பூஜை அறையில் வைத்தால் என்னவாகும் தெரியுமா?
பொதுவாக பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து பலரும் வணங்குவதை நாம் அவதானித்திருப்போம். ஆனால் அவ்வாறான செயல்கள் நல்லதா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினையை ஏற்படுத்துமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படம்
இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டு பூஜை அறையில் மாட்டி வைப்பது, வீட்டிற்கு நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.
பூஜை அறையில் இறந்தவர்களின் புகைப்படத்தை வைக்கக்கூடாது. நாம் இறந்தவர்களை கடவுளாக நினைத்து வழிபாடு செய்தாலும் கூட அவர்களும் மனிதர்கள் தான் என்று கூறப்படுகின்றது.
வாழும் போது பாவங்கள் செய்திருப்பார்கள். ஆகவே கடவுள் படத்திற்கு இணையாக அவர்களின் படத்தை பூஜையறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திர நியதிகள் தெரிவிக்கின்றது.
வேறு எந்த இடத்தில் வைக்கலாம்?
பூஜை அறை மற்றும் படுக்கை அறை ஆகிய இரண்டு இடங்களையும் தவிர்த்து பிற இடங்களில் முன்னோர்களின் படத்தை வைத்து வழிபடுவது பாதிப்பை ஏற்படுத்தாதாம்.
அதுமட்டுமில்லாமல், இறந்த நபரின் பார்வை புகைப்படத்தில் தெற்கு திசை நோக்கி பார்க்கும் படி படத்தை மாட்டி வைத்தால் போதும். இதுதான் குடும்பத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் திசையாகும்.
முன்னோருக்கு பூஜை அறை விளக்கு வைக்கலாமா?
பூஜை அறை விளக்கு இல்லாமல் முன்னோருக்கு தனிவிளக்கு வாங்கி பயன்படுத்த வேண்டுமாம். ஆனால் பூஜை அறை விளக்கை பயன்படுத்தக்கூடாதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |