இரவில் தயிர் சாப்பிடலாமா? யாரெல்லாம் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது?
நம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு நல்ல ஜீரண சக்தியை அதிகரிக்கும் திறன் தயிருக்கு உண்டு.
பொதுவாக பால் சாப்பிட்டால் ஒரு மணிநேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும், ஆனால் தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது, குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
இரவில் சாப்பிடலாமா?
பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும். அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக்கொண்டால் சளிப்பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது.
அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப்படுத்திவிடும்.
மற்ற பலன்கள்
அடிக்கடி உணவில் தயிர் சேர்த்து வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கலாம்.
அல்சர் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள தயிரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும் புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது மற்றும் வைட்டமின் பி12 அதிக அளவில் உள்ளது.
மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும் தயிர் மற்றும் எலுமிச்சைசாறு அருந்தி வர இந்த பிரச்சினை சரியாகும்.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது