பல் துலக்காமல் தண்ணீர் குடிப்பது ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுமா? மருத்துவர்களின் கருத்து இதோ
தினமும் காலையில் பல் துலக்காமல் தண்ணீர் பருகுவது தீமையை ஏற்படுத்துகின்றதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பல் துலக்குவது
பொதுவாக உடலை சுத்தமாக வைப்பது நமது ஆரோக்கியத்தில் முக்கியமாக கருதப்படுகின்றது. இதில் ஒன்று தான் பல் துலக்குவது.
ஆதலால் கண்டிப்பாக காலையில் பல் துலக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் உடலும் சுத்தமாக இருக்காது என்றும் பலரும் நினைத்துள்ளனர். ஆனால் இதன் உண்மை கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை எழுந்ததும் பல் துலக்குவது என்பது வாடிக்கையாக செய்யும் செயலாகும். இவை தனிப்பட்ட சுகாதாரத்தை பாதுகாக்கின்றது. மேலும் காலையில் பல் துலக்குவது கட்டாயம் என பல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.

ஏனெனில் வாயிலுள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதோடு, பல் பாதுகாப்பாகவும் இருக்குமாம். ஆனால் மருத்துவர்கள் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.
ஆனால் பல் துலக்கிய பின்பு தண்ணீர் குடிக்கவேண்டுமா? முன்னதாகவே குடிக்க வேண்டுமா? என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கின்றது. இதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்வோம்.
தண்ணீர் எப்பொழுது குடிக்க வேண்டுமா?
நமது உடல் வெப்பநிலையை சீராக்கி, புத்துணர்ச்சி அளிப்பதற்கு தண்ணீர் குடிப்பது மிக அவசியமாகும். அதிலும் காலை வெறும் வயிற்றில் குடிப்பது ஆரோக்கிய நன்மையினை அளிக்கின்றது.
அதுவே காலையில் எழுந்ததும் சிறிது தண்ணீர் வைத்து உமிழ்ந்த பின்பு தண்ணீர் பருகலாம். இவ்வாறு செய்யும் போது நன்மையளிக்கும் பாக்டீரியாக்கள் கிடைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றதாம்.

அதிலும் காலை மாலை இரண்டு வேளையும் பல் துலக்கும் போது உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படுமாம். அதாவது இரவில் வாயில் தங்கியிருக்கும் உணவு கழிவுகளை அகற்றிவிட்டால், கெட்ட பாக்டீரியாக்கள் நமது உடலில் தங்காதாம். மேலும் பல் பிரச்சனைகள் எதுவும் வராமலும் பார்த்துக் கொள்ளலாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |