சாப்பிட்டதும் உடனே தண்ணீர் குடிப்பது சரியா? மருத்துவ நிபுணரின் கருத்து
நமது வாழ்க்கை முறைக்கு உணவு எந்த அளவிற்கு முக்கியமாகிறதோ அதை விட அதிகமாக தண்ணீர் முக்கியம் பெறுகிறது.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியே அனுப்புவதற்கு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமாகும். தண்ணீர் குடிப்பதால் நமது உடல் எப்போதும் பலத்தையும் ஆற்றலையும் பெறும்.
குடல் பகுதியின் சீரான செயல்பாட்டுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். இப்படியான நன்மைகளை தரும் தண்ணீரை நாம் சாப்பிட்டதும் அதிகமாக குடிக்கிறோம்.
இந்த செயல் சரியானதா? என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தண்ணீர்
நாம் சாப்பிடும் முன்பு 30 நிமிடங்களுக்கு முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் நமது செரிமானம் சரியாக நடைபெறும்.
ஊட்டச்சத்து உறிஞ்சுதலும் தடையில்லாமல் நடக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாப்பிடுவதற்கு முன்பு குறிப்பிட்ட அளவு தண்ணீரை குடிக்கலாம்.
நீங்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் அது பல விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் செரிமானம் சரியாக நடைபெறாது.
மந்தம், உப்புசம், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்தும். சாப்பிட்டு முடித்ததுமே உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது. சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிப்பதே செரிமானத்துக்கு உகந்ததாக இருக்கும்.
சாப்பிடும்போது குளிர்ச்சியான தண்ணீர் குடிப்பதும் செரிமான மண்டலத்திலுள்ள என்சைம் செயல்திறனை குறைத்துவிடும்.
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் உடல் பலவீனம் அடையும் என்று மருத்துவத்தில் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |