ஆஸ்துமாவின் அறிகுறிகள் என்ன? கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த தகவலை தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட நுரையீரல் நோயாகும். இவை சுவாசபாதைகளில் ஏற்படும் வீக்கத்தினால் ஏற்படுவதுடன், இது சுவாசிப்பதையும் கடினமாக்குகின்றது.
இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் ஆஸ்துமா, எந்த வயதினருக்கும் வரக்கூடிய வியாதியாகும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது.
ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறிகள்:
உடற்பயிற்சியின் போது அல்லது இரவு வேளையில் இருமல் அதிகமாக இருக்கும்.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படலாம்.
மார்பு பகுதியில் இறுக்கம் மற்றும் அழுத்தம் ஏற்பட்டு, அது மூச்சு இறுக்கமாக இருக்கும்.
நுரையீரலில் அதிகமான சளி மற்றும் இருமும் போது அதிகமான மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு
ஆஸ்துமா சிகிச்சை:
ஆஸ்துமா குணமாக சிகிச்சை இல்லை என்றாலும் அதனை கட்டுப்படுத்த மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
வீக்கத்தை குறைக்கவும், சுவாசப்பாதைகளை திறக்கவும் இன்ஹேலர்களை பயன்படுத்தலாம்.
வாய்வழி மற்றும் ஊசி மூலம் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்:
அலர்ஜி உணவுகளை அறிந்து அவற்றைத் தவிர்ப்பது
ஆரோக்கியமான உணவை உண்ணுதல்
வழக்கமான உடற்பயிற்சி
புகைபிடிப்பதைத் தவிர்ப்பது
ஆரோக்கியமான எடையை பராமரித்தல்
மன அழுத்தத்தை போக்குதல்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |