வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்
பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி சில விலங்குகளுக்கும் கூட கோபம் வருவது வழக்கம். உளவியல் ரீதியாக நமது மனம் ஏற்றுக்கொள்ளாத மனதிற்கு பிடிக்காத விடயங்கள் நடக்கும் போது கோபம் ஏற்படுகின்றது.
ஆனால் சில விநாடிகள் கோபப்படுவது கூட உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
இது ஆரோக்கியத்தில் எந்தளவு பாதக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.
குறிப்பிட்ட சில நிமிடங்கள் கோபப்படுவது கூட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிரை பறிக்கும் நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றது.
கோபம் கொள்வது மிகவும் ஆபத்தானது என அனைவரும் அறிந்திருப்பினும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் பலருக்கும் இருப்பதிலை்லை.
கோபம் மாரடைப்பை ஏற்படுத்துமா?
கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த American Heart Association என்ற ஆய்வு நிறுவனம், 280 இளைஞர்களை வைத்து மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் மூலம் சில நிமிடங்கள் நாம் கோபப்படுவதால் எத்தகைய பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரியவந்துள்ளது.
அந்த வகையில் ஆரோக்கியமான இளைஞர்களைக் கொண்டு, சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் American Heart Association வெளியிட்டுட்ட அறிக்கையில் கோபப்படுவதால் ரத்த நாளங்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
அதனால் இதயத்தில் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மற்ற குழுவினருடன் ஒப்பிடும்போது, கோபத்தின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், அந்த குழுவில் இருந்தவர்களுக்கு ரத்த நாளங்களின் விரிவாக்கம் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்த நாளங்களின் விரிவாக்கம் குறையும் போது அது நேரடியாக தமனி செயல்பாட்டை பாதிப்பதால், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சீறுநீரக பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.
இதனடிப்படையில் வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே இதய ஆரோக்கியம் வலுவாக பாதிக்கப்படுவதுடன் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தவிர்த்துக்கொள்ள முடிந்தளவு கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |