வயிற்றில் வரும் கோடுகளை எண்ணெய் மசாஜ் சரிச் செய்யுமா? மருத்துவர் கொடுக்கும் அறிவுரை
பொதுவாக உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு அல்லது உடற்பயிற்சி செய்து, உடலை பெரிதாக்குபவர்களுக்கு உடலில் சில பகுதிகள் தசை கிழிந்து ஒருவிதமான அடையாளம் போன்று இருக்கும்.
இதனை சரிச் செய்ய வீட்டு வைத்தியங்கள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.
ஆனால் இதனால் எந்தவித பயனும் இல்லை என மருத்துவர் ஒருவர் ஆணித்தனமாக கூறுகிறார்.
ஏனெனின் தோலின் இரண்டாம் அடுக்கு கிழிவதால் தான் இந்த நிலை உருவாகிறது. அதற்கு நாம் முதல் தோலில் எண்ணெய் மசாஜ், க்ரீம்களின் பாவனை இப்படி என்ன செய்தாலும் பயனில்லை.
அந்த வகையில், தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தால் தசைகளில் இருக்கும் தழும்புகள் மறையுமா? என்பதற்கு மருத்துவர் கொடுத்த விளக்கத்தை பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்
வயிற்றில் குழந்தையுடன் இருப்பவர்கள், உடற்பயிற்சி அதிகமாக செய்து உடலை கட்டுகோப்புடன் வைத்திருப்பவர்கள், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தோலின் இரண்டாம் அடுக்கு கிழிந்து கோடுகள் உருவாகும்.
இதனை சரிச் செய்ய சிலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் போட்டு மசாஜ் செய்வார்கள்.
தினமும் செய்து வந்தால் நாளடைவில் கோடுகள் மறைந்து விடும் என கருத்து சமூகத்தில் உள்ளது. ஆனால் இது உண்மையில்லை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கிறார்.
இது போன்ற வைத்தியங்கள் ஒருபோதும் உள்ளே சென்று கிழிந்த தசைகளை ஒன்றாக்காது. எனவே கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை அனைத்தும் போலியனது எனக் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
