நரசிம்மர் படம் வீட்டில் வைத்தால் இவ்வளவு நன்மைகளா?
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக நரசிம்ம அவதாரம் பார்க்கப்படுகிறது.
காட்டிற்கே ராஜாவான சிங்கத்தின் தலையும், மனித உடலும் கொண்ட இந்த அவதாரத்தை தன் பக்தனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே எடுத்தார்.
யார் ஒருவர் நரசிம்ம ஜெயந்தி அன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தீபம் ஏற்றி, தன்னுடைய கஷ்டங்களை நினைத்து தூய்மையாக வேண்டிக் கொள்கிறாரோ அவருக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
அந்த வகையில், நரசிம்ம படத்தை வைத்து எப்படியெல்லாம் வேண்டிக் கொண்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வழிபாடு செய்தால் என்ன நடக்கும்?
1. பக்த பிரகலாதனை மடியில் அமர வைத்திருக்கும் நரசிம்மர் அல்லது லட்சுமியை அமர வைத்திருக்கும் நரசிம்ம படம் இரண்டில் எதை வைத்து வீட்டில் பூஜை செய்தாலும் நேர்மறையான சக்திகள் கிடைக்கும்.
2. நரசிம்மர், விஷ்ணுவின் அவதாரம் என்பதால் துளசி இலைகளை வைத்து அர்ச்சனைகள் செய்யலாம். மேலும் செவ்வரளி, சிவப்பு செம்பருத்தி ஆகிய பூக்களை வைத்து பூஜைகள் செய்யலாம்.
3. பூஜைகளின் போது உங்களால் முடிந்த நைவேத்தியத்தை நரசிம்மருக்கு படைக்கலாம்.
4. நரசிம்மர் ஜெயந்தி விரதத்தை அவர்வருக்கு எப்போது முடிகிறதோ அப்போது பிடிக்கலாம். அதிகாலையில் எழுந்து வழிபாடு செய்வது இன்னும் சிறந்தாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |