விமானங்களில் பறக்கும் போது மை நிரப்பிய பேனாவை ஏன் பயன்படுத்தக்கூடாது?
விமானங்களில் பயணிக்கும் போது மை நிரப்பிய பேனாவை எடுத்துச் செல்லக்கூடாது என கூறுவார்கள்.
இது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா?
இதற்கான முழுமையான காரணம் இதோ,
ஆகாய விமானம் உயரே பறக்கும் போது அங்கே காற்றின் அழுத்தம் குறைந்து கொண்டே போகும்.
அழுத்தத்தை ஈடு கட்ட விமானத்தில் உள்ளே செயற்கை அழுத்தத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.
சில சமயம் அந்த தேவையான அழுத்தம் சமண்பாட்டுக்கு வரும் முன், ஒரிரு வினாடிகள் குறைந்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த நேரத்தில் உங்களது பேனாவில் உள்ள மையின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அதை சரி செய்ய மை வெளியே வந்து சட்டையை கறையாக்கி விடும்.
மீண்டும் மீண்டும் மை நிரப்பப்பட்டு பயன்படுத்தப்படும் பேனா வகைகளில், நாம் அவற்றை பயன்படுத்த பயன்படுத்த அதில் உள்ள மை-ன் அளவு குறைந்து காற்று அதன் இடத்தை நிரப்புவது இயல்பு ஒன்றே.
இதேபோல் காற்றானது அழுத்தம் அதிகமாக உள்ள இடத்தில் இருந்து அழுத்தம் குறைவான இடத்திற்கு செல்லும் என்பதும் இயல்பான ஒன்றே.