இந்த உணவுகளை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாக இருக்குமா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
சரும அழகு என்பது பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் எல்லோருக்கும் தேவைப்பட்ட விடயமாகும்.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் காணப்படுகின்றது. பருவ காலங்களில் எமது சருமம் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
இந்த நேரத்தில் நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீர் குடிக்க முடியாதவர்கள் தண்ணீரில் எலுமிச்சை பெரி போன்ற பழங்களை சேர்த்து குடிக்கலாம்.
எட்டு முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். இவ்வாறு குடிக்க சூழ்நிலை இல்லாதவர்கள் நீரைப்போன்று சக்தி கிடைக்கும் உணவுகளும் உள்ளன. இந்த உணவுகளை உண்பதால் சருமம் சிதைவடைந்ததில் இருந்து விடுபட்டு அழகு கிடைக்கும்.
அவ்வாறான உணவுகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
இனிப்பு உருளைக்கிழங்கு
அதில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்திற்கு ஈரப்பதனை அளிக்கிறது. இதில் வைட்டமின் சியும் காணப்படுகின்றது. இதனால் சருமம் விரிசல் ஆவதை தவிர்த்து பாதுகாக்கிறது.
இதில் இருக்கும் பீட்டோ கரட்டின் சருமத்தின் அழகை பாதுகாக்கின்றது. மேலும் இதில் மாங்கனீசு, வைட்டமி பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பிற சத்துக்கள் மூலம் சூரியனிடமிருந்தும் இயற்கை தடுப்பானாக செயல்படுகிறது.
விதைகள்
விதைகளாக நாம் உண்ணக்கூடிய விதைகள் பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி, ஹேசல்நட்ஸ் விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள், பைன் நட்ஸ், மக்காடமியா போன்றவை சரும நலனை அளிக்கின்றது.
இவை உடல் கலங்களில் ஈரப்பதத்தை தக்கவைத்து சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும். இதனால் சருமத்திற்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் மாசு படிதலை தடுக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்துக்கள் காணப்படுகின்றது. அது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவும். வெயிலினால் ஏற்படும் எரிச்சலை குறைக்கிறது. நீங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காய் சேர்ப்பது நல்லது.
தேங்காய்
தேங்காய் என்றாலே பல நன்மைகள் அளிப்பவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தேங்காயில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. இதன் காரணமாக முகத்தில் முகப்பரு வராது.
தேங்காயில் இருக்கும் வைட்டமின் ஈ, வைட்டமின் கே, மொனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் புரதங்கள் உள்ளன.
சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுவதால் சருமத்தின் அழகை மேம்படுத்தும்.
தயிர்
தயிரில் புரோபயாடிக் நிறைந்து காணப்படுகின்றது. இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்யும். இது ஈரப்பதத்தை தக்கவைத்து சருமத்தின் வறட்சியை வரவிடாமல் தடுக்கும். தினமும் உங்கள் உணவில் உங்களுக்கு பிடித்தவாறு தயிரை சேர்த்துக் கொண்டால் நல்லது.