பிளாஸ்டிக் டப்பாவில் சுடச் சுட உணவை வைத்து சாப்பிட்டால் ஆபத்து.... ஆண்களே மிகவும் எச்சரிக்கை!
பிளாஸ்டிக் கொள்கலன்களில் உணவுகளை அடைத்து வைத்து சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனப் பொருட்கள் சூடான உணவுப் பொருட்களில் கலந்து உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றது.
உடலுக்குள் இரசாயண பொருட்கள் கலந்த பிறகு ஏற்படும் ஆபத்துகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
பக்கவிளைவுகள்
- பிளாஸ்டிக் கொள்கலனில் சூடான உணவை சேமிப்பதால் சூழ்ந்திருக்கும் வெப்பநிலை உணவில் உள்ள மெலமைனின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.
- இது சிறுநீர் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும்.
- மார்பகப் புற்றுநோய் அதிகரிப்பதற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடும் முக்கிய காரணமாகும்.
- பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு அல்லது தண்ணீரை சேமித்து வைக்கும்போது அதிலிருக்கும் நச்சுக்கள் வெளியேறும். அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்துவிடும்.
- விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும்.
- ஆண்களின் ஹார்மோன் அளவும் பாதிப்படையக்கூடும்.
- பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களில் உள்ள தண்ணீரை குடிப்பதால் கல்லீரல் புற்றுநோய் உண்டாகக்கூடும்.
- பிளாஸ்டிக்கில் பைபினைலில் ஏ உள்ளது. இது உடல் பருமன், நீரிழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, கருத்தரிப்பில் சிக்கல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கும்.
- பெண்களுக்கு பருவமடைதல் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
- பிளாஸ்டிக் பயன்பாடு நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
ஆண்களே எச்சரிக்கை
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி பிளாஸ்டிக் பொருட்களில் டைதைல் ஹெக்ஸைல் பித்தலேட் எனப்படும் சேர்மங்கள் உள்ளன.
பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிடுவதால் பாலியல் ஹார்மோன் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும்.
குறிப்பாக விந்தணு உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த வாழையிலையில் உணவு உண்ணும் பழக்கத்தினை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.