சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக அதிகப்படியான மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு விதமான சிகிச்சை முறைகளை முயற்சி செய்து பார்ப்பார்கள். சிலரோ, மனஅழுத்தம் தரும் செயல்களிலிருந்து திசை திருப்பும் முயற்சியில் இறங்குவார்கள்.
அந்த அளவுக்கு மனஅழுத்தத்தின் தாக்கம் மூலை, முடுக்குகளில் இருப்பவர்களைக்கூட விடாமல் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறது. `என்னை ஏம்மா இப்பிடி காலையிலயே டென்ஷன் பண்றே?’ என்று சின்னஞ்சிறு குழந்தைகூடக் கேட்கிறது.
இவ்வாறு உலகையே உலுக்கும் மன அழுத்த பிரச்சினைக்கான தீர்வு நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்டில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ம முடிகின்றதா? ஆம் தினசரி டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறையும் என ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
டார்க் சாக்லேட்
எண்டோர்பின்' அதாவது உடம்பில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும் உணவு வகைகளில் சாக்லேட்டுக்கு நிகர் எதுவுமில்லை. அவற்றில் டார்க் சாக்லேட், cortisol மற்றும் catecholamines எனும் மனஅழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது.
அதிகப்படியான மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், 70 சதவிகிதத்துக்கும் மேல் `கொக்கோ' உள்ளடங்கிய சாக்லேட்டுகளை எடுத்துக்கொள்ளலாம். சாக்லேட்தானே என்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டாலும் பிரச்னைதான். இதில், அதிகப்படியான கலோரி இருப்பதால், எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
எனவே தினசரி 5 கிராம் அளவுக்கு டார்க் சாக்லேட் சாப்பிடுவதனால் மன அழுத்தம் குறைவடைகிறது. மேலும் சாக்லேட் சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடும் போது சாக்லேட் சாப்பிடுபவர்கள் 2 வருடங்கள் அதிகமாக வாழ்கின்றனர் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |