தேனீக்களின் விஷத்தை முகத்தில் பூசிக்கொள்ளும் இங்கிலாந்து ராணி! காரணம் என்ன தெரியுமா?
இன்றைய காலத்தில் வயோதிகம் என்பது மிகவும் சீக்கிரமாகவே நபர்களுக்கு ஏற்படுகின்றது. உணவு பழக்கவழக்கங்கள் மாறியுள்ளதால், சிறுவயதிலேயே வயதான தோற்றத்துடன் அநேகர் காணப்படுகின்றனர்.
இதற்கும் மேல் வயதாகி காணப்படும் நபர்கள் தங்களது முகம் சுருக்கம் இல்லாமல் இருப்பதற்கு பல வகையான கிரீம்களை பயன்படுத்துவதுடன், முடியையையும் செயற்கை முறையில் பராமரித்து வருகின்றனர்.
இங்கிலாந்து ராணி
அரச குடும்பத்தில் இருப்பவர்கள், தங்களை மக்களிடையே அழகாகக் காட்டிக் கொள்ளத் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அத்தகைய புதுவிதமான முயற்சியைத்தான், இங்கிலாந்து ராணி கமிலா மேற்கொள்கிறார்.
தன்னுடைய மாமியாரான இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின்னர், அரச குடும்பத்தின் குயின் கன்சோர்ட் ஆனார், கமிலா (Queen consort camilla). இவருக்கு தற்போது 75 வயதாகிறது.

Eddie Mulholland/Pool via Getty Images, FILE
இவர் வயதாவதை எதிர்த்துப் போராடவும், தன்னுடைய இளமை தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் முகத்திற்குத் தேனீக்களின் விஷத்தை உபயோகிக்கிறார். தேனீயின் விஷமா என வியக்கிறீர்களா?.
தென்கொரியாவில் அதிகம் விற்பனையாகும் அழகு சாதன பொருள்களில் தேனீ விஷமும் ஒன்று. அதாவது தேனீயின் விஷ கிரீம் சுருக்கங்களைப் போக்கும் தன்மையைக் கொண்டது. அமெரிக்காவின் மிட்செல் நிறுவனம், இந்த கிரீமை தயாரித்துள்ளது, அந்த கிரீமையே இவர் பயன்படுத்துகிறார்.
