அணு அணுவாக பிரிந்த ஒட்டகத்தின் உயிர்! கடவுளாக வந்த நபரின் மாஸான செயல்
மரணிக்கும் தருவாயில் கிடந்த ஒட்டகம் ஒன்றினை ஹீரோவாக செயல்பட்டு கார் சாரதி ஒருவர் காப்பாற்றிய காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் மிகவும் கோரமாகவே இருக்கும். மனிதர்களே இதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகம் எவ்வாறு இதனை கடந்து செல்லும் என்பதை நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும்.

தண்ணீர் தாகத்திற்காக காட்டுக்குள் இருக்கும் பெரும்பாலான விலங்குகள் ஊருக்குள் வருவதை அவ்வப்போது நாம் அவதானித்து வருகின்றோம்.
இங்கு ஒட்டகம் ஒன்று பாலைவனமான பகுதியில் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி மரணிக்கும் தருவாயில் காணப்படுகின்றது.
இதனை அப்பகுதியில் வந்த சாரதி ஒருவர் அதற்கு தண்ணீர் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை மீட்ட காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.
Drained by the heat, the camel was few minutes away from passing out. Kind driver gives water & revives it.
— Susanta Nanda (@susantananda3) June 11, 2023
We are experiencing unexpected heat waves. Your few drops of water can save the lives of animals. Be compassionate to our fellow travellers . pic.twitter.com/daE7q9otdv
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |