Mobile phone-களில் உங்க நம்பரை Forward செய்கிறீர்களா? எச்சரிக்கையாக இருங்கள்
இந்த காலகட்டத்தில் UPI பணப் பரிவர்த்தனை மோசடி, போலியான டெலிவரி மோசடி என பல ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
அதேபோல் Mobile phone அழைப்புகளை Forward செய்வதன் காரணமாகவும் மோசடி நடைபெற்று வருகின்றன.
மற்ற மோசடிகளை போலவே இந்த மோசடிகளில் உங்கள் வாங்கி கணக்குகளில் இருக்கும் மொத்த பணமும் மோசடியில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
நமது Mobile phone-களில் அழைப்புகளை ஏற்க முடியாத சூழலில், அதனை மற்றொரு நம்பருக்கு நாம் Forward செய்து வைப்போம்.
தற்போது இதன் மூலமாகவும் மோசடி நடைபெறக் கூடும் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மோசடி எப்படி நடக்கிறது?
Airtel, Jio மற்றும் Vodafone போன்ற அனைத்து SIM பயனர்களுக்கும் இந்த மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது.
நீங்கள் உங்களுக்கு வரும் அழைப்பை Forward செய்திருப்பதை அறிந்து உங்கள் நம்பருக்கு அலைக்கும் மோசடியாளர்கள் “உங்கள் நம்பர் முடக்கப்பட்டது அல்லது உங்கள் சிம் கார்டில் பிரச்னை இருக்கிறது’’ என்று சொல்வார்கள்.
பின் 01 என்ற எண்ணுக்கு Dial செய்யுமாறு மோசடியாளர்கள் கூறுவார்கள். இதனை Dial செய்வதன் மூலம் உங்கள் SMS மற்றும் OTP போன்றவற்றை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
இவற்றை பயன்படுத்தி உங்கள் வாங்கி கணக்குகளில் உள்ள பணத்தை அவர்கள் மோசடி செய்து திருடிக் கொள்வார்கள்.
மேலும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைவதன் விவரம் கூட உங்களுக்கு தெரியாமல் போய்விடும்.
அண்மையில் இதுபோன்ற மோசடியால் பணத்தை இழந்த ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |