தாய்பாசத்தால் நெகிழ வைத்த யானைக்கூட்டம்.. நேரில் பார்த்து திகைத்துப்போன வனத்துறையினர்
உடல்நிலை சரியில்லாத தாய் யானையை தேடி யானைக்குட்டியொன்று வந்த சம்பவம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
தேடி வந்த குட்டி யானை
கோவை - மருதமலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டில் தாய் யானையொன்று இருந்துள்ளது.
குறித்த யானையின் குட்டி, பெரிய யானை கூட்டத்துடன் சென்ற நிலையில் வனத்துறையினர் யானைக்குட்டியை குழுவாக பிரிந்து தேடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில், இரவு 10.30 மணிக்கு குட்டி யானையே, தனது தாயின் இருப்பிடத்தை சரியாக கண்டுபிடித்து பார்க்க வந்துள்ளது.
தாயை பார்த்து சுமாராக 2 மணி நேரம் கொஞ்சிய விளையாடிய பின்னர் காட்டிற்குள் சென்றது.
பிரமிக்க வைத்த சம்பவம்
இந்த நிலையில், ஆண் யானைகள் இரண்டு, பெரிய பெண் யானைகள் என யானைக் கூட்டமே குறித்த குட்டியானைக்காக காத்திருந்து அழைத்து கொண்டு மீண்டும் காட்டிற்குள் சென்றது. இதனை சுமாராக 4 குழுக்கள் பார்வையிட்டு கொண்டிருந்தனர்.
நடக்க முடியாமல் மிக மோசமான நிலையில் இருந்த தாய் யானை தற்போது மருத்துவர்களால் உரிய சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் இன்று காட்டிற்குள் விடப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் தாய் பாசம் எல்லாம் இருக்கிறது என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
From despair to hope and from struggle to triumph, this is the incredible story of a wild elephant mother's fight for survival backed by a dedicated and professional team of foresters and vets from Coimbatore in Tamil Nadu Forest Department .The mother elephant was found sick… pic.twitter.com/w2YsuBHazI
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 3, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |