இரட்டை தலையுடன் பிறந்த கன்றுகுட்டி.. வியப்பில் உரிமையாளர்
தருமபுரி மாவட்டத்தில் இரட்டை தலையுடன் கன்றுகுட்டி பிறந்துள்ள நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
இரட்டை தலையுடன் பிறந்த கன்று
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவீந்தர் என்கிற விவசாயி. இவர் தனது வீட்டில் இரண்டு கறவை மாடுகளை வளர்த்து வரும் நிலையில், அதில் ஒரு மாடு கன்று ஒன்றினை ஈன்றுள்ளது.
இரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்த இந்த கன்று குட்டிக்கு நான்கு கண்களும் இரண்டு வாய் மற்றும் இரண்டு மூக்கு என அதிசயமாக பிறந்துள்ளது.
இந்த தகவல் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தெரியவர காட்டு தீ போல் பரவியது. இதனையடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அதிசய கன்று குட்டியை பார்ப்பதோடு செல்பி எடுத்து செல்கின்றனர்.
இந்த மாட்டின் உரிமையாளர் பசு மாட்டையும் ஈன்ற அதன் கன்று குட்டியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.