கால்சியம் சத்து குறைவாக இருக்கின்றதா? இந்த உணவுகள் ரொம்ப முக்கியம்
மனித உடம்பில் எலும்பின் அதிக சத்துக்களுக்கு கால்சியம் சத்து அவசியமாக காணப்படுகின்றது. ஆதலால் கால்சியம் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று பலரும் பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். ஆனால் பால் பொருட்களில் தான் அதிக கால்சியம் சத்துக்கள் இருக்கின்றது.
வலுவான எலும்புகளுக்கான உணவுகள்
கீரைகள் மற்றும் காலிஃபிளவர், ப்ரோக்கோலி, பீட்ரூட், கருப்பு கடுகு, சுரைக்காய், பட்டாணி, பச்சைப்பயறு மற்றும் ஓட்மீல் சாப்பிடலாம்.
கொட்டைகள் மற்றும் உலர் பழங்களில் கால்சியம் அதிக அளவில் உள்ளது.
பாதாம் கொட்டையில் புரதம், கால்சியம் அதிகமாக இருப்பதால் இவை எலும்புகள், தசைகள், மூட்டு வலிக்கு முக்கியமாக இருக்கின்றது. பாதாம் பால், பாதாம் வெண்ணெய், ஊறவைத்த பாதாம் என பல வழிகளிலும் பாதாமை உட்கொள்ளலாம்
வெள்ளை எள் மற்றும் மஞ்சளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
சுரைக்காய் மற்றும் சோயா என்று அழைக்கப்படும் சோயாபீன்ஸில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் டி சத்துக்களும் இருக்கின்றது.