முட்டைகோஸில் உள்ள நாடாப்புழு - இதை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்!
முட்டைக்கோஸ் ஆனது இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான காய்கறியாகும். முட்டைக்கோஸில் பல ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது. ஆனால், முட்டைகோஸில் காணப்படும் நாடா புழுக்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். அதில் காணப்படும் ஒரு புழு மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம். அதனால் தான் முட்டைகோஸ் சாப்பிடுவதை பலரும் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். முட்டைக்கோசில் காணப்படும் இந்த நாடாப்புழு எங்கிருந்து வருகிறது, இது ஏன் மிகவும் ஆபத்தானது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
முட்டைக்கோஸில் காணப்படும் இந்த நாடப்புழு மக்களின் மூளையில் அதன் அபாயகரமான தாக்கம் உலகின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், இந்தியாவில் இந்த பாதிப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
மேலும், இந்த நாடாப்புழு தொற்று ஏற்பட்ட விலங்குகளின் மலத்தில் காணப்படும் புழுக்களால் பரவுகிறது. பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் உள்ள நாடாப்புழு பல முறை கழுவிய பிறகும் அகலுவதில்லை. நாடாப்புழுக்கள் குடல் மற்றும் மூளையை அதிகமாக தாக்குகின்றன.
அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக மிக அதிகம். இந்த புழுக்கள் அங்கு முட்டைகளை இடுகின்றன, அவை உடல் முழுவதும் பரவி தொற்றுநோயைப் பரப்புகின்றன. உடலில் அவற்றின் இருப்பது ஆரம்ப நிலையில் கண்டறியப்படுவது மிகவும் கடினம்.
தொற்று முற்றீய பிறகே அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. அதன் முக்கிய அறிகுறிகள் கடுமையான தலைவலி, பலவீனம், சோர்வு, வயிற்றுப்போக்கு, பசியின்மை, உடலில் ஊட்டச்சத்துக்கள் திடீரென குறைவது ஆகியவை. நாடாப்புழு உடலில் நீளம் 3.5 செ.மீட்டர் வரை இருக்கலாம்.
வயது வந்த நாடாப்புழுக்கள் 25 செ.மீட்டர் நீளம் வரை வளரும். நாடா புழு 30 ஆண்டுகள் வரை வாழலாம். மூளையில் நாடாப்புழு தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு சில சமயங்களில் நோயாளி உயிரைக் கூட இழக்க நேரிடும்.
சிகிச்சைக்காக, நோயாளிக்கு மருந்துகள் கொடுப்பதோடு, அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. எனவே, முட்டைக்கோஸ் உட்பட அனைத்து பச்சை காய்கறிகளையும் நன்கு கழுவவும்.
சுத்தமான இடத்தில் வைக்கப்பட்ட பொருட்களை மட்டுமே சாப்பிடுங்கள்.
பச்சையாக அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால் நாடாப்புழு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தவிர்க்கவும். நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிடுவதே சிறந்தது.