தினமும் முட்டைகோஸ் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
முட்டை கோஸ் கீரை வகையை சேர்ந்த ஒரு உணவாகும்.
இதில் வைட்டமின் ஏ, உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான சி மற்றும் கே போன்றவை அதிகமாக உள்ளது.
சுலபமாக தேங்காய் பால் ஆப்பம் செய்யலாம் வாங்க.... அட இவ்வளவு ஈசியா?
முட்டைகோஸ் யாரெல்லாம் சாப்பிடலாம், அதனைச் சாப்பிடுவதால் ஏற்படுகிற நன்மைகள் என்னென்ன போன்றவை குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்
- எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
- புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் முட்டைகோஸில் நிறைய உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முட்டைகோஸ் முற்றிலும் தடுக்கும்.
- அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
- ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
- உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.
- இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.
- முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. தற்போது மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற முட்டைகோஸ் சாப்பிட்டால், அல்சைமர் நோயை தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், மூளையில் ஏற்படும் பிளேக்கை குறைக்கும்.
- முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.
- முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.
காலை எழுந்தவுடன் இந்த நீரை பருகினால் சர்க்கரை நோய் கிட்டயே வராதாம்
தலைமுடி வளர்ச்சியை தூண்டும்
ஆம், முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரில் உங்கள் கூந்தலை அலசுவதால் அது தலைமுடிக்கு நன்மைகளை கொடுக்கிறது.
முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருக்கும். இது தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
அதோடு இதில் பொட்டாசியம், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் இ இருக்கிறது இவை உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.
மாசு மருவற்ற பொலிவான சருமம் கிடைக்க தொடர்ந்து முட்டைகோஸ் தண்ணீரை பயன்படுத்தலாம்.
கோடைக்கால வெப்பத்தை கூலாக கழிக்க....அப்போ இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!
என்றும் இளமையாக ஜொலிக்கலாம்
ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் கொண்டாடும் போது, நமக்கு வயதாகிவிட்டதே என்ற ஒரு கவலை ஒரு கணம் வந்து போகாமல் இருக்காது.
எல்லாருக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே பலரது கனவாக இருக்கிறது.
மரணத்தை முன் கூட்டியே கணித்து உயிரிழந்த நபர் - காரணம் என்ன?
அவர்கள் எல்லாருக்கும் வரப்பிரசாதமாக இருப்பது இந்த முட்டைகோஸ் ஜூஸ் தான். இதில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் ஆகியவை நிறைந்திருக்கிறது.
இவை குடிப்பதால் உங்களது விரைவில் வயதான தோற்றம் உண்டாவதை கட்டுப்படுத்தும்.முட்டைகோஸை உணவில் சுண்டலாக, பொரியலாக, கூட்டு , சூப்பாக கூட எடுத்து கொள்ளலாம்.
முட்டைகோஸ் சூப் ரெசிபி
தேவையான பொருட்கள்
- முட்டைகோஸ் – 1 கப்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
முட்டைகோஸ் சூப் சிம்பிள் செய்முறை
முதலில் முட்டைகோஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
மீன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமைகள் இருக்கா! உஷாரா இருக்கனும் இனி
அதன்பின், இவற்றுடன் நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது, அவை நன்கு கொதித்து வாசம் வரும். அவற்றை இறக்கி பரிமாறினால் சுவையான முட்டைகோஸ் சூப் தயராக இருக்கும்.
பக்க விளைவுகள்
முட்டைக்கோஸ் சாப்பிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது என்றாலும், கருத்தில் கொள்ள வேண்டிய சில பக்க விளைவுகளும் உள்ளன.
சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த உணவுகளை சாப்பிடவே வேண்டாம்! ஆபத்தை ஏற்படுத்துமாம்
- முட்டைக்கோஸை அதிக அளவில் சாப்பிடுவது தைராய்டை பாதிக்கலாம் என்று சில சான்றுகள் தெரிவிக்கின்றன.
- முட்டைக்கோஸில் உள்ள கோய்ட்ரோஜன்கள் எனப்படும் பொருட்கள், தைராய்டுக்கு அயோடின் செல்வதை தடுப்பதன் மூலம் தைராய்டு சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
- பொதுவாக முட்டைக்கோஸ் வாயு உற்பத்தி செய்யும் காய்கறி என்று அறியப்படுகிறது.
- எனவே அதிகமாக உட்கொள்வது வாய்வு, செரிமான தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
- முட்டைக்கோஸ் சாற்றில் உள்ள சில சத்துக்கள் சில மருந்துகளுடன் தொடர்பு கொள்வதாகக் சொல்லப்படுகிறது.
- இரத்தத்தை மெலிதாக்கும் மருந்து எடுத்துக் கொள்பவர்கள் உணவில் முட்டைக்கோஸ் சாற்றைச் சேர்க்கும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
முக்கிய குறிப்பு
அளவாக சாப்பிட்டு முட்டைகோஸின் பலன்களை பெற்று கொள்ளுங்கள்.
உங்க மூக்குக்கு மேல கரும்புள்ளி நிறைய இருக்கா? அதனை எளிய வழியில் போக்க சில டிப்ஸ்