பாத்ரூமில் கேட்ட முனகல் சத்தம்: வாயில் துணியுடன் 13 வயது சிறுமி பட்ட அவஸ்தை
சென்னையில் பெண்ணிற்கு லிப்ட் கொடுத்து காரில் கடத்தி சென்று வன்புணர்வு செய்த கொடுமை அரங்கேறியுள்ளது.
சென்னையில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 13 வயது சிறுமி, கடந்த செவ்வாய் கிழமை ஆடை தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்ற கார் ஓட்டுனர் தன்னுடைய காரில் வந்துகொண்டிருந்த நேரத்தில், தனியாக வந்த சிறுமியை அவதானித்து, காரில் அமருமாறு கூறியுள்ளார்.
குறித்த சிறுமியும் குமரேசன் தெரிந்தவர் என்பதால் துணிந்து காரில் ஏறி அமர்ந்துள்ளார். ஆனால் தனது வீட்டிற்கு செல்லாமல், அவரது வீட்டிற்கு சென்றதால் சிறுமி சத்தம் போடத் தொடங்கியதையடுத்து, அவரது வாயில் துணியை திணித்து தனது வீட்டில் பாத்ரூமில் அடைத்து வைத்துள்ளார்.
பின்பு சிறுமியின் தாய் மகளை காணாமல் பொலிசில் புகார் கொடுத்ததையடுத்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவினை ஆய்வு செய்த பொலிசார் குமரேசன் காரில் சிறுமி ஏறி செல்வதை அவதானித்துள்ளனர்.
அப்போது அவர் வீட்டிற்கு சென்ற போது, வீட்டின் பாத்ரூமிலிருந்து ஒரு பெண்ணின் முனகல் சத்தம் கேட்டதை தொடர்ந்து, கதவை உடைத்து பெண்ணை மீட்டுள்ள பொலிசார் குமரேசனை கைது செய்துள்ளனர்.