2026-ல் தங்கம் வாங்க நினைக்கிறீங்களா? இந்த ரிஸ்க் மட்டும் எடுக்காதீங்க
தற்போது தங்கம் விலையியும் வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதில் 2026 இன் நிலமை என்னவாக இருக்கும் எனபதை பதிவில் பார்க்கலாம்.
2026 இன் தங்க நிலவரம்
இந்த ஆண்டு தங்கத்தின் விலையில் அதிக மாற்றம் இருந்தது. எதிர்பாராத அளவில் தஙகத்தின் விலை அதிகரிப்பு உச்சத்தில் இருந்தது. இதனால் சாதாரண மக்கள் தங்கம் வாங்குவதில் சிரமத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சமீப காலமாக அதிகமான பண்டிகைகள் வருவதால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கமாக தற்போது வந்து கொண்டு இருக்கின்றது. இதில் மிக முக்கியமாக வெள்ளி விலையில் அதிகமான மாற்றம் காணப்படுகின்றது.

இதனால் முதலீட்டாளர்களின் பார்வை வெள்ளி பக்கம் திரும்பி உள்ளது. முதலீட்டாளர்கள் வெள்ளியை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் 2026 புத்தாண்டில் தங்கம் வாங்கலாமா, தங்கம் வாங்க சரியான நேரமா அல்லது தற்போது தங்கத்தை விற்கலாமா போன்ற பல குழப்பங்கள் மக்களிடையே உள்ளது. இது தொடர்பாக கருத்துக்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர்கள் கருத்து
நிங்கள் தங்கத்தை ஏற்கனவே வாங்கி உள்ளீர்கள் என்றால் அதை உங்களிடமே இருக்கட்டும். இதை அவசரப்பட்டு விற்கவோ அல்லது வேறு எதாவது செய்யவோ வேண்டாம்.
தங்கம் விரைவாக அதிக வருமானத்தை அளிக்கவில்லை என்றாலும், பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் அது ஒரு பெரிய பாதுகாப்பாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிகரித்து வரும் பணவீக்கம், நாணய மதிப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் பதட்டங்கள் போன்ற சூழ்நிலைகளில் இது உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.

இதை விட நிண்ட கால தேவைகளை பூர்த்தி செய்யவும் 2026இல் தங்கம் உதவியாக இருக்கும். அதாவது கல்வி, திருமணம் அல்லது பிற நீண்ட கால தேவைகள்.
புதிதாக தங்கம் வாங்க விரும்புவோர்கள் ஒரே நேரத்தில் பெரிய தொகைக்கு தங்கத்தை வாங்குவது நல்லதல்ல. அதற்கு பதிலாக நீங்கள் சிறிய தொகைக்கு தங்கத்தை வாங்கலாம்.
அல்லது படிப்படியாக, SIP வடிவத்தில் வாங்குவது நல்லது. இதன் மூலம், விலை அதிகமாக இருக்கும்போது தங்கத்தை ஒரே நேரத்தில் வாங்குவதால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

இத்தகைய திட்டங்கள் சந்தையில் ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக பாதுகாப்பை தரும். வெள்ளியில் முதலீடு செய்யும் போது அதிக எச்சரிக்கை தேவை.
வெள்ளி விலைகள் தங்கத்தை விட மிக வேகமாக மாறுவதால் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலகளாவிய அரசியல் சூழ்நிலைகள், தொழில்துறை மற்றும் தேவையில் ஏற்படும் மாற்றங்கள், இந்த காரணிகள் அனைத்தும் விலைகளில் திடீர் மாற்றங்களுக்கு வழிவகுக்கும். எனவே இதுபோன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு தங்கத்தை முதலீடு செய்வது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |